×

சென்னை-ரேணிகுண்டா மார்க்கத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை: சென்னை -ரேணிகுண்டா மார்க்கத்தில் நேற்று 130 கி.மீ அதிவேகத்தில் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், சென்னை சென்ட்ரல்-ரேணிகுண்டா இடையே ரயிலின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்தது. இதையடுத்து இருப்புப்பாதை மேம்பாட்டு பணிகள் முடிந்த நிலையில் அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்படப்பட்டது. இந்நிலையில் நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த பிரத்யேக சோதனை ஓட்டம் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம் வழியாக 24 நவீன பெட்டிகள் இணைக்கப்பட்ட பயணிகள் ரயிலை 130 கி.மீ வேகத்தில் இயக்கி ஆய்வு செய்யப்பட்டது.
 
அதன்படி சென்னை சென்ட்ரல் - ரேணிகுண்டா இடையே மதியம் 1 முதல் 2.30 மணி வரையிலும், மற்றும் ரேணிகுண்டா- சென்னை சென்ட்ரல் இடையே மாலை 3.30 மணி முதல் 5 மணி வரையிலும் ஆர்.டி.எஸ்.ஓ மூலம் நடத்தப்பட்ட இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது. எனவே இத்தடத்தில் விரைவில் பயணிகள் ரயில்களாக இயக்கப்படும். இதையடுத்து சென்ட்ரல்- ரேணிகுண்டா இடையே பயண நேரம் 1.30 மணி நேரத்தில் சென்றடையலாம். இது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai ,Renigunta , Chennai-Renigunta high speed train test run successful
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...