×

நாகர்கோவில்-தாம்பரம் அதிவேக சிறப்பு ரயில்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: திருவனந்தபுரம் - எர்ணாகுளம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (06304,06303) வரும் 14ம் தேதி திங்கள் கிழமையில் இருந்து இயக்கப்படுகிறது. அதேபோல், எர்னாகுளம் - கன்னூர்- எர்னாகுளம் சிறப்பு ரயில் (06305, 06306) வரும் 15ம் தேதியில் இருந்து தினமும் இயக்கப்படும். திருவனந்தபுரம் - மங்களூர் சென்ட்ரல் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்( 06347, 06348) வரும் 16 ம் தேதியில் இருந்து இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம் - மதுரை- திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (06343, 06344) வரும் 23ம் தேதியில் இருந்து இயக்கப்படுகிறது. அதேபோல், திருவனந்தபுரம் - குருவாயூர் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் (06342, 06341) வரும் 15ம் தேதியில் இருந்து இயக்கப்படுகிறது. அதைப்போன்று தாம்பரம் - நாகர்கோவில் இடையே வாராந்திர அதிவேக சிறப்பு ரயில்(06065) வரும் 16ம் தேதி முதல் இரவு 7.25 மணிக்கு ஞாயிறு, திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் புறப்படும். அதேபோன்று நாகர்கோவில்- தாம்பரம் இடையே அதிவேக வாராந்திர சிறப்பு ரயில் (06066) திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் வரும் 17ம் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Nagercoil-Tambaram , Nagercoil-Tambaram high speed special train
× RELATED நாகர்கோவில்-தாம்பரம் இடையே நாளை...