×

பிறந்த நாள் கொண்டாட்டம் : அருணாசலம் முதல் ஆதித்யா அருணாசலம் வரை.. போயஸ் கார்டனில் குவிந்த 'ரஜினிக்கள்' ; கோயில்களிலும் சிறப்பு வழிபாடு

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் ரசிகர்கள் சிறப்பு பூஜைகள் செய்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். ரஜினிகாந்த் நீண்ட ஆயுள் பெறவும், தமிழகத்தின் முதலமைச்சராக வர வேண்டியும் ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு பூஜைகளை நடத்தினர். ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, நள்ளிரவில் போயஸ் தோட்ட வீட்டின் அருகே ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரஜினியின் வீடு முன்பு திரண்டனர்.

அதில் நாடக கலைஞர்கள் பலரும் ரஜினி போல் வேடமணிந்துள்ளார்கள். ரஜினி நடித்த மனிதன், தர்மதுரை, பாட்ஷா, அண்ணாமலை, அருணாசலம், பாபா, தர்பார் உள்ளிட்ட படங்களில் ரஜினியின் கெட் அப்களை போட்டுள்ளனர். நடை, உடை, அலங்காரம், ஸ்டைல் என போயஸ் கார்டனையே கலக்கினர் .
பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள்.



Tags : Birthday Celebration ,Arunachal Pradesh ,Aditya Arunachalam ,Rajinis ,temples ,Boise Garden , Temple, Worship, Rajinikanth
× RELATED 400 இடங்களை கைப்பற்றுவோம் எனக்கூறி...