×

பசுவதை தடை மசோதா கொடூரமானது. அறிவியலுக்கு மாறானது மட்டுமல்ல, விவசாயிகளுக்கு எதிரானது : சித்தராமையா தாக்கு


பெங்களூரு, :கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:கர்நாடக அரசு சட்டசபையில் நிறைவேற்றியுள்ள பசுவதை தடை மசோதா கொடூரமானது. அறிவியலுக்கு மாறானது மட்டுமல்ல, விவசாயிகளுக்கு எதிரானது. மக்களின் உணர்வுகளை தூண்டி அதன் மூலம் வாக்குகளை பெற வேண்டும் என்பது தான் இந்த மசோதாவின் பின்னணியில் பாஜகவுக்கு உள்ள நோக்கம். கால்நடைகள் மீது பாஜவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தி, பொதுமக்களின் கருத்துகளை கேட்ட பிறகு இந்த பசுவதை தடை சட்டத்தை கொண்டு வரலாம்.

பசு மாடுகள் மீது பாஜவுக்கு அதிக அக்கறை இருந்தால் நாடு முழுவதும் ஒரே சட்டமாக பசுவதை தடை சட்டத்தை கொண்டுவர வேண்டும். அத்துடன் வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதையும் தடை செய்ய வேண்டும். ஒருவேளை இந்த சட்டத்தை கர்நாடக அரசு அமல்படுத்தினால், வயதான மாடுகளை அரசே ஏற்று பராமரிக்க வேண்டும். அல்லது அவற்றின் பராமரிப்புக்கு ஆகும் செலவை அரசே வழங்க வேண்டும். இதற்கு அரசு தயாராக இருந்தால், அடுத்த வாரமே சட்டசபையை கூட்டட்டும், அதில் பங்கேற்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : attack ,Chidramaiah , Chittaramaya, attack
× RELATED கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது