×

மத்திய அரசை கண்டித்து ஹரியானாவில் சுங்கச்சாவடிகளை மூடி விவசாயிகள் போராட்டம் : கட்டணம் பெறாமல் ஒருவழியில் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதி!!

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் 17வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஹரியானாவில் சுங்கச்சாவடிகளை வேளாண் அமைப்பினர் கைப்பற்றி வருகின்றனர்.ஹரியானா எல்லையில் பாஸ்டரா, பியோன்ட் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள், சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி வருகின்றனர். சுங்கக்கட்டணம் இல்லாமல் அனைத்து வாகனங்களையும் விவசாயிகள் அனுப்பி வருகின்றனர்.

பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) தலைவர்கள் மல்கித் சிங் மற்றும் மணீஷ் சவுத்ரி தலைமையிலான 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் அம்பாலா நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்பாலா-ஹிசார் நெடுஞ்சாலையில் ஒரு டோல் பிளாசாவில் கூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 1 முதல் விவசாயிகள் டோல் பிளாசாக்களில் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வருவதால் அங்கு, பயணிகளிடமிருந்து கட்டண கட்டணம் வசூலிக்கப்படவில்லை.பஞ்சாபில் தேசிய நெடுஞ்சாலைகளில் 25 டோல் பிளாசாக்கள் உள்ளன.இங்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கவில்லை என்பதால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) ஒரு நாளைக்கு ரூ .3 கோடி இழப்பை சந்தித்து வருகிறது.

இதனிடையே புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறவில்லை என்றால், பல்வேறு மாநிலங்களில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இருப்பதாக வேளாண் சங்கங்கள் எச்சரித்துள்ளன. இந்த நிலையில் ஹரியானா எல்லையில் உள்ள சுங்கச் சாவடிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.


Tags : closure ,toll booths ,Haryana , Haryana, Customs, Farmers, Struggle
× RELATED நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய...