எரிகற்கள் மழை. முழு சூரிய கிரகணம், வியாழன், சனி கோள்கள் சேர்க்கை : அடுத்தடுத்த நாட்களில் வானில் நிகழவிருக்கும் அதிசயங்கள்!!

சென்னை : 2020ம் ஆண்டின் இறுதியை நெருங்கிவிட்டோம். பெரும்பாலானோருக்கு இந்த ஆண்டு கசப்பான ஆண்டாக அமைந்திருந்தாலும் ஆண்டின் இறுதி கண்ணுக்கு விருந்தாக அமைய போகிறது. அடுத்தடுத்த நாட்களில் 2 கோள்கள் ஒன்றாக சேர்வது, எரிகற்கள் பொழிவது, முழு சூரிய கிரகணம் போன்ற வான்வெளி அதிசயங்கள் பல நிகழப்போகின்றன.

டிசம்பர் 13 மற்றும் 14ல் எரிகற்கள் மழையாய் பொழியும்

நாளை மற்றும் நாளை மறுநாள் எரிகற்கள் மழையாக பொழியும் காட்சியை காணப்போகிறோம். வால் நட்சத்திரங்கள் விட்டு செல்லும் தூசி மண்டலத்தின் வழியாக பூமி செல்லும் போது எரிகற்கள் பொழியும் நிகழ்ச்சி நடைபெறுவதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்கு 150 எரி நட்சத்திரங்கள் வீழும் என்று கூறப்படுகிறது. இது உலகம் முழுவதும் தெரியும். ஆனால் ஒளி மாசு நிறைந்த நகர்ப்புறங்களில் ந்த காட்சியை ஓரளவுக்கு தான் காண முடியும்.

முழு சூரிய கிரகணம்

நாளை மறுநாள் முழு சூரிய கிரகணம் நிகழ போகிறது.சிலி மற்றும் அர்ஜென்ட்டினா நாடுகளில் இந்த முழு கிரகணம் தெரியும். அப்போது 24 நிமிடங்களில் நிலவு சூரியனை கடந்து செல்லும். 2 நிமிடங்கள் 9 வினாடிகள் மட்டும் முழுமையாக நிலவு சூரியனை மறைக்கும். சூரியனுக்கு முன்னாள் நிலவின் பயணபாதை திரை போல ஒன்றை உருவாக்கும். இதை தெற்கு அமெரிக்காவில் தெற்கு முனையில் பகலிலேயே காண முடியும்.

 2 கோள்கள் ஒன்றாக சேர்வது

800 ஆண்டுகளுக்குப் பின்னர் நடப்பாண்டு கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தெரிய வாய்ப்பிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.வரும் 21 ம் தேதி, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, சூரிய குடும்பத்தின் மிகப் பெரிய இரண்டு கிரகங்களான வியாழன் மற்றும் சனி ஆகியவை அருகருகே தோன்றும். அவையிரண்டும் ஒளிரும்போது ஏற்படும் வெளிச்சமே கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது.இந்த இரு கிரகங்களும் கடந்த ஆயிரத்து 226ம் ஆண்டு நெருக்கமாக இருந்தாகக் குறிப்பிடும் ஹூஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தற்போது 800 ஆண்டுகளுக்குப் பின் அந்த நிகழ்வைக் காண வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: