×

அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்; மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ந‌டிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முகநூல் பதிவு; இன்று  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு: அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள், நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Rajinikanth ,Birthday ,MK Stalin ,Greetings , Happy Birthday to dear friend Rajinikanth with love and affection; Greetings from MK Stalin
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...