×

மிரட்டும் கொரோனா...!! உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7.14 கோடியாக உயர்வு; 16 லட்சத்தை தாண்டியது உயிரிழப்பு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,600,316 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 7,14,12,745 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 49,595,366 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 106,569 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.14 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.95 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.  மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.06 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

Tags : victims , Intimidating corona ... !! Worldwide number of victims rises to 7.14 crore; More than 16 lakh casualties
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...