×

2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு: 9 பேர் பெண்கள்; 9 பேர் ஆண்கள்

வாஷிங்டன்: வரும் 2024ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ‘ஆர்டெமிஸ்’ திட்டத்துக்காக, இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா சாரி உட்பட 18 விண்வெளி வீரர்களை நாசா அறிவித்துள்ளது.  அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா,’ வரும் 2024ல் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இது, கடந்த  1969ம் ஆண்டு அனுப்பிய ‘அப்போலோ-11’ விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங்,் ஜூலை 20ம் தேதி முதலில் நிலவில் கால் பதித்தார். இந்நிலையில், நாசா தனது ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தின் கீழ் 2வது முறையாக நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 18 விண்வெளி வீரர்களின் பெயர்களை நேற்று முன்தினம் அறிவித்தது இவர்களில் 9 பேர் பெண்கள், 9 பேர் ஆண்கள். இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா சாரியும் இடம் பெற்றுள்ளார்.

முதல் கட்டமாக, ஆர்டெமிஸ்-1 திட்டத்தின் முலமாக ‘ஓரியன்’ எனப்படும் ஆளில்லாத விண்கலம் அடுத்தாண்டு நிலவுக்கு அனுப்பப்படுகிறது. இது, நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்யும். இதைத் தொடர்ந்து, 2024ம் ஆண்டில் ‘ஆர்டெமிஸ்-2’ திட்டத்தில் விண்வெளி வீரர்கள் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளனர். தேர்வு செய்யப்பட்டுள்ள 18 வீரர்களில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் மட்டும் இதற்காக அனுப்பப்பட உள்ளனர்.

ராஜா சாரி யார்?
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாகி நகரில் கடந்த 1977ம் ஆண்டு ராஜா சாரி பிறந்தார். இவருடைய தந்தை நிவாஸ் வி சாரி. ஐதராபாத்தை சேர்ந்தவர். இன்ஜினியரான இவர் தனது இளம் பருவத்திலேயே அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார். ராஜா சாரி தனது பள்ளிப் படிப்பை ஐயோவா மாகாணம், வாட்டர்லூ நகரில் உள்ள கொலம்பஸ் உயர் நிலைப்பள்ளியில் முடித்தார். பின்னர், விண்வெளி பொறியியல் பட்டமும், ஏரோநாட்டிக்ஸ், விண்வெளித் துறையில் முதுகலை பட்டமும் பெற்றார். மேரிலேண்டில் உள்ள அமெரிக்க கடற்படை பயிற்சி பைலட் கல்லூரியில் விமானி பயிற்சி பெற்று விமானப் படையில் கர்னலாக சேர்ந்தார். 2017, ஆகஸ்ட்டில் நாசாவில் இணைந்தார்.

என் தந்தையின் ஊக்குவிப்பு
நாசா விண்வெளி வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றது தொடர்பாக ராஜா சாரி கூறுகையில், ‘‘நான் என் தந்தையால் ஊக்குவிக்கப்பட்டேன். நல்ல உயர் கல்வியை பெற வேண்டும், சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ஐதராபாத்தில் இருந்து அவர்   அமெரிக்காகு வந்தார். அது என் வாழ்க்கையிலும் பிரதிபலித்துள்ளது,” என்றார்.

* அமெரிக்காவின் முக்கிய போர் விமானங்களில் ஒன்றான எப்- 35 உட்பட அனைத்து அதிநவீன போர் விமானங்களையும் ராஜா சாரி 2 ஆயிரம் மணி நேரங்களுக்கு மேல் இயக்கி அனுபவம் பெற்றுள்ளார்.
* ராஜா சாரி மனைவியின் பெயர் ஹோலி ஸ்காப்பர். இவருக்கு 3 பிள்ளைகள். இவரது தாய் பெக்கி சாரியும் இவருடன்தான் ஐயோவாவில் வாழ்ந்து வருகிறார்.

Tags : moon ,astronauts ,women ,Indian ,men , Plan to go to the moon in 2024 Name 18 astronauts, including those of Indian descent: 9 women; 9 men
× RELATED தமிழக – கேரள எல்லையில் கண்ணகி கோயில்...