×

உலகளவில் கொரோனா பாதிப்பு 7 கோடி தாண்டியது: 15.9 லட்சம் பேர் பலி

புதுடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 கோடியை தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது ஒட்டு மொத்த உலக நாடுகளையும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. உலகளவில் இந்த  வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று 7 கோடியை தாண்டியது. மேலும், 15 லட்சத்து 88 ஆயிரத்து 247 பேரை பலியாகி உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, உலகளவில் 7 கோடியே 71 லட்சத்து ஆயிரத்து 368 பேர் பாதித்துள்ளனர்.இதில், 4 கோடியே 91 லட்சத்து 39 ஆயிரத்து 558 பேர் குணமாகி உள்ளனர். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, ஒரு கோடியே 99 லட்சத்து 83 ஆயிரத்து 563 ஆக உள்ளது. இவர்களில் 1.06 லட்சம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன..

ஒரே நாளில் 3,000 பேர் பலி
உலகளவில் அதிகமாக பாதித்த நாடாக அமெரிக்கா உள்ளது. இந்நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 55 லட்சம் மக்கள் கொரோனா வைரசால் பாதித்துள்ளனர். 2 லட்சத்து 90 ஆயிரம் இறந்துள்ளனர். நேற்று முன்தினம் மட்டுமே, இந்நாட்டில் ஒரே நாளில் 3 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்

Tags : corona exposure , Globally, corona exposure exceeds 7 crore: 15.9 lakh people killed
× RELATED மாவட்டத்தில் ஒரு வாரமாக குறைந்த கொரோனா பாதிப்பு