×

சிஎம்எஸ்-01 செயற்கைகோளுடன் 17ம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட்

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாதம் முதல் ராக்கெட் ஏவும் பணிகள் அனைத்தையும் இஸ்ரோ தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. கடந்த மாதம் 7ம் தேதி பி.எஸ்.எல்.வி-சி49 ராக்கெட் மூலம் இஓஎஸ்-01 என்ற நவீனரக புவிகண்காணிப்பு செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதையடுத்து, வரும் 17ம் தேதி ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிற்பகல் 3.41 மணிக்கு இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட் மூலம் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தும் சி.எம்.எஸ்-01 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

இந்த செயற்கைகோளில் உள்ள சி-பேண்ட் அலைக்கற்றைகள் இணைய சேவை மற்றும் செல்போன் சேவைகளை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக, இந்திய நிலப்பரப்பு மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் செல்போன் மற்றும் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தும். பி.எஸ்.எல்.வி சி-50 ராக்கெட்டானது பி.எஸ்.எல்.வி ராக்கெட் ரக வரிசையில் 52வது ராக்கெட் ஆகும். சி.எம்.எஸ்-01 செயற்கைகோள் இந்தியாவின் 42வது தகவல் தொடர்பு செயற்கைகோள் ஆகும்.

Tags : C-50 ,PSLV ,CMS , PSLV C-50 rocket launches on 17th with CMS-01 satellite
× RELATED உலகிலேயே இதுவரை இல்லாத அளவு 2024 மக்களவை...