×

கோவையில் இசை குறியீடு வடிவத்தில் எஸ்.பி.பி. நினைவு வனம்

கோவை:பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த செப்டம்பர் 25ம் தேதி மறைந்தார். அவரது நினைவாக கோவை பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சி மற்றும் சிறுதுளி அமைப்பின் சார்பில், எஸ்.பி.பி. வனம் உருவாக்கும் நிகழ்ச்சி பச்சாபாளையத்தில்உள்ள ஆபீசர் காலனியில் நேற்று நடந்தது.

கிரீன் கலாம் அமைப்பின் நிறுவனர் மற்றும் திரைப்பட நடிகர் விவேக், சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் ஆகியோர் மரங்களை நட்டு எஸ்.பி.பி. வனத்தை துவக்கி வைத்தனர். இதில், எஸ்.பி.பி.யின் 74 வயதை நினைவு கூரும் வகையில், ரோஸ்வுட், செஞ்சந்தனம், வேம்பு, சில்வர் ஓக், வேங்கை,தேக்கு, பண்ருட்டி பலா, சந்தன மரம், மா மரம் என இசை கருவிகள் தயாரிக்கபடும் 74 வகையான மரங்கள் இசை குறியீடு வடிவத்தில் நடப்பட்டது.

Tags : SBP ,Coimbatore ,Memorial Forest , SBP in the form of music code in Coimbatore. Memorial Forest
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...