×

அதிமுக-தேமுதிக கூட்டணி விரிசலா? : அமைச்சர் பரபரப்பு பேட்டி

நாகை, : அதிமுக-தேமுதிக கூட்டணியில் விரிசலா என்று கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்துள்ளார்.அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகையில் இன்று அளித்த ேபட்டி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார். அந்த சட்டங்களால் எந்த ஒரு விவசாயிக்கும், எந்த காலத்திலும் தீங்கு ஏற்படாது. யாருக்காவது கஷ்டமோ, நஷ்டமோ வந்தால் அவர்களை முதல்வர் கைவிட மாட்டார்.

ரஜினி கட்சி தொடங்கினால் திராவிட கட்சிகள் முடிவுக்கு வந்து விடும் என்று சத்யநாராயணா அறிவிக்கை விட்டுள்ளார். யாரும் எதற்கும் ஆசைப்படலாம்.ஜனநாயக நாட்டில் அந்த உரிமை உள்ளது.பாராளுமன்றம் புதிதாக கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வாஜ்பாய் காலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நமது வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து பாராளுமன்றத்தை காத்தனர். எனவே பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பாராளுமன்றம் கட்டப்படுவது அவசியமானது.

மழை பாதிப்பை முதல்வர் வந்து பார்வையிட்டு சென்றுள்ளார். பாதிப்பு விவரம் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது. விரைவில் நிவாரணம் வழங்கப்படும். விவசாயிகள் கவலைப்பட வேண்டாம் என்றார்.தேமுதிக 234 தொகுதியிலும் போட்டியிடும் என்று பிரேமலதா கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, தேர்தல் வரட்டும், பார்ப்போம் என்று ஓ.எஸ்.மணியன் கூறினார்.

Tags : AIADMK ,Temujin ,interview ,Minister , AIADMK, Temujin, Coalition, Minister
× RELATED அதிமுக குறித்தோ, எடப்பாடி பழனிசாமி...