3 நாட்கள் பயணமாக பாஜ தலைவர் ஜே.பி.நட்டா 30ம் தேதி தமிழகம் வருகை :தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டி

சென்னை, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தி.நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மேற்கு வங்கத்தில், பாஜ தேசிய தலைவர் ேஜ.பி.நட்டாவின் கார் தாக்கப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.  தேசிய தலைவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலைதான் அங்கு நீடித்து வருகிறது.  இதே போல கேரளாவிலும் தாக்குதல் நடந்து வருகிறது. வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

வேளாண் திருத்த சட்டங்கள் தொடர்பாக தமிழக பாஜ சார்பில் விவசாயிகளை சந்தித்து பேச உள்ளோம். சுமார் 1000 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இதில் மத்திய அமைச்சர்கள் மட்டுமல்லாமல் தேசிய நிர்வாகிகளும் பங்கேற்க இருக்கிறார்கள். பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 30, 31, ஜனவரி 1ம் தேதி தமிழகம், புதுச்சேரிக்கு வர திட்டம் இருக்கிறது. முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தமிழகத்தில் பாஜ வெற்றி பெறும் தொகுதிகள் பட்டியலை கட்சி தலைமைக்கு கொடுத்துள்ளோம். சட்டமன்ற தேர்தலில் பாஜ போட்டியிடும் தொகுதிகளை கட்சி தலைமை முறைப்படி அறிவிக்கும்.

Related Stories:

>