×

’17 பேர் மரணம்’ மேட்டுப்பாளையத்தில் மீண்டும் கட்டப்பட்ட தீண்டாமை சுவர் : கோவை ஆட்சியருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்!

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சுமார் 80 அடி நீளம், 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த சுற்று சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த சுவர் அருகில் இருந்த 4 ஓட்டு வீடுகளின் மேல் விழுந்ததால், வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சிவசுப்பிரமணியன் என்பவர் கட்டிய தீண்டாமை சுவர் இடிந்து விழுந்து ஆதித்திராவிடர சமூகத்தை சேர்ந்த 17 பேர் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்ததையடுத்து, சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், மீண்டும் அந்த சுவரை கட்டி விட்டார்.

இந்த நிலையில், அரசு அனுமதியுடன் மேட்டுப்பாளையத்தில் மீண்டும் அந்த தீண்டாமை சுவர் கட்டப்பட்டது தொடர்பாக கோவை  மாவட்ட ஆட்சியர் கு.ராசாம ணிக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “மேட்டுப்பாளையம் நடூரில் உயிரிழப்பு ஏற்பட்ட பகுதியில் மீண்டும் சுவர் கட்டப்பட்டுள்ளதாக தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கோவை மார்க்ஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, உரிய விவரங்களை அடுத்த15 நாட்களுக்குள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்’’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாள ருக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.


Tags : death ,Governor ,National Commission ,Coimbatore ,Underprivileged , Mettupalayam, Untouchability, Wall, Coimbatore, Collector, National Inferior, Commission, Notice
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...