அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மாஸ்க் அணிந்திருந்தாலும் தனிமனித இடைவெளியை பின்பற்றப்படவில்லை : நீதிபதிகள்

சென்னை : அதிமுக வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் விதிமீறல் நடந்ததாக எழுந்துள்ள புகாருக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சி சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த அக். 7ம் தேதி நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். அதேபோல் அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வெளியிலும் தொண்டர்கள் ஆட்டம் , பாட்டம் என உற்சாகமாக இருந்தனர் . இதில் முகக்கவசம் இல்லாமல், சமூக இடைவெளி பின்பற்றப்படாமலே இருந்ததை கவனிக்க முடிந்தது.

இந்நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. திருவொற்றியூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி என்பவர் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்,அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மாஸ்க் அணிந்திருந்தாலும் தனிமனித இடைவெளியை பின்பற்றப்படவில்லை என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக ஜனவரி 6க்குள் பதிலளிக்க சுகாதார செயலாளர், மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories:

>