தலைநகர் டெல்லியில் பாரதியார் கைத்தடி மாயமானதால் பரபரப்பு : பொதுமக்கள் கடும் அதிருப்தி

டெல்லி : மகாகவி பாரதியாரின் 139வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாப்பட்டது. அரசியல் கட்சியினர், தேசிய தலைவர்கள், பள்ளி மாணவ மாணவிகள் என அனைவரும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் டெல்லி லோதி சாலையில் உள்ள பாரதியார் சிலை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் இந்த பகுதியில் முக்கிய மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் வசிக்கக்கூடிய இடமாகும்.

இந்நிலையில் மேற்கண்ட பகுதியில் சுபரமணிய மார்க் என்ற சாலையில் உள்ள பாரதியார் சிலைக்கு அவரது பிறந்த நாளான இன்று பல்வேறு முக்கிய நபர்கள் மாலை அணிவித்தனர். இதில் கவணிக்க வேண்டியது என்னவென்றால் சிலையில் பாரதியார் கையில் வைத்திருக்கும் அவரது அடையாள சின்னமான கைத்தடியானது அங்கு இல்லாமல் காணமால் போய் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

 இதையடுத்து அங்குள்ள ஊழியர்கள் கூறும்போது, கடந்த நான்கு நாட்களாக தான் பாரதியார் சிலையின் கையில் இருந்த தடியான இல்லாமல் உள்ளது. அதனை நாங்களும் கவனித்தோம். இதில் ஒருவேலை கைத்தடி இருப்பால் ஆனது என்பதால் யாராவது திருடி சென்று விட்டர்களா, அல்லது ஒருவேலை கீழே விழுந்து அதிகாரிகள் தரப்பில் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை என கூறினார்.

இதையடுத்து பாரதியார் சிலையில் அவரது அடையாள சின்னமாக இருக்கும் கைத்தடி காணாமல் போய் உள்ளது குறித்தும், உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே.வாசன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோருக்கு  உடனடியாக கடிதம் எழுதி அனுப்பி வைத்தார். இதையடுத்து உங்களது கோரிக்கை மிக விரைந்து சரி செய்யப்படும் என அவர்களும் உறுதியளித்துள்ளனர். இதையடுத்து அடுத்த ஓரிரு நாளில் மேற்கண்ட பாரதியார் சிலை புத்துயிர் பெறும் என தெரியவருகிறது.

Related Stories:

>