மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கான நிரந்தர தீயணைப்பு வாகனம் அமைக்க எத்தனை நாள் ஆகும்?: ஐகோர்ட் கிளை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கான நிரந்தர தீயணைப்பு வாகனம் அமைக்க எத்தனை நாள் ஆகும்? என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையை சேர்ந்த அப்துல் ரகுமான் தொடர்ந்த வழக்கில் அரசு பதில் தர உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. 2008ல் நடைபெற்ற தீ விபத்தில் வீர வசந்த ராய மண்டபத்தின் தூண்கள், கூரை சேதமடைந்தன. தீ விபத்தை அடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாகன நிறுத்தத்தில் தற்காலிக தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது.

Related Stories:

>