×

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் : குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி என அறிவிப்பு!!

சிவகங்கை, :சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். தமிழகம் முழுவதும் மறைமுக தேர்தல் ஜன.11 அன்று நடந்த நிலையில் சிவகங்கை மாவட்ட ஊராட்சிக்கான தேர்தல் போதிய கோரம் இல்லை என ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் ஜன.30 இரண்டாவது முறையாகவும், மற்றும் மார்ச் 4ல் மூன்றாவது முறையாகவும் ஒத்திவைக்கப்பட்டது.

நான்காவது முறை நடக்கும் கூட்டத்தில் வருகை தரும் உறுப்பினர்களில் இருந்து தேர்தல் நடத்தப்பட்டு கட்டாயம் தலைவர், துணைத்தலைவர் தேர்வு செய்யப்பட்ட வேண்டும். ஆனால் நான்காவது கூட்டம் கடந்த 7 மாதங்களாக நடத்தப்படவில்லை. இப்பிரச்னை தொடர்பாக திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதையடுத்து டிச.4ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலும், பிற்பகல் 3மணிக்கு துணை தலைவர் தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தத

இந்நிலையில், சிவகங்கைக்கு கொரோனா ஆய்வுப்பணிக்கு டிச.4ம் தேதி தமிழக முதல்வர் வருகை தந்ததால் அன்றைய தினமும் தேர்தல் நடக்கவில்லை. இன்று (டிச.11) காலை 10 மணிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலும், பிற்பகல் 3 மணிக்கு துணைத்தலைவர் தேர்தலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, .சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் செந்தில், அதிமுக சார்பில் பொன்மணி பாஸ்கர் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தல் முடிவில், திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு தலா 8 வாக்குகள் கிடைத்து சமநிலையில் முடிந்ததால் மாவட்ட ஆட்சியர் குலுக்குல்  முறைக்கு ஏற்பாடு செய்தார். இந்த குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். படம் (திமுக சார்பில் போட்டியிடும் செந்தில்குமார் - அதிமுக சார்பில் போட்டியிடும் பொன்மணி பாஸ்கரன்)

Tags : Sivagangai ,district panchayat leader election ,victory ,AIADMK , Sivagangai, District Panchayat, Chairman, Election
× RELATED பயணிகளுடன் வந்த பேருந்தில் தீ