×

தங்கம் கடத்தல் கும்பலுடன் எனக்கு தொடர்பு கிடையாது: கேரள சபாநாயகர் பேட்டி

திருவனந்தபுரம்: கேரளாவில் தூதரகம் மூலமாக நடந்த தங்கம் கடத்தல்  வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சொப்னா உள்பட முக்கிய   குற்றவாளிகளுடன் கேரள  சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாக   கடந்த சில  தினங்களாக தகவல் பரவி வந்தது. சபாநாயகர் தங்கம் கடத்தல்   கும்பலுடன் சேர்ந்து வெளிநாடுக்கு டாலர்கள் கடத்தியதாகவும் புகார்   கூறப்பட்டது. கேரள மாநில  பாஜ தலைவர் சுரேந்திரன் நேரடியாகவே சபாநாயகர்   ஸ்ரீராமகிருஷ்ணன்  மீது  குற்றம்சாட்டினார். இந்நிலையில், சபாநாயகர்   ராமகிருஷ்ணன்  அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி  குறிப்பில்,  தங்கம் கடத்தல் கும்பலுடன் சபாநாயகர்  ராமகிருஷ்ணன் ஒரு முறை கூட  வெளிநாட்டுக்கு பயணம்  செய்யவில்லை.  சபாநாயகரையும், அவரது   அலுவலகத்தையும்  தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன்  தொடர்புபடுத்துவது  முறையல்ல என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சபாநாயகர் ராமகிருஷ்ணன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தங்கம் கடத்தலில் தொடர்புடையவர்களுக்கு நான் எந்த உதவியும் செய்யவில்லை. ஒருமுறை கூட நான் அவர்களுடன் ஒன்றாக பயணம் செய்ததில்லை.  வெளிநாட்டில் வைத்தும் நான் அவர்களை சந்திக்கவில்லை. இது தொடர்பாக என் மீது கூறப்படும் புகார்களில் எந்த உண்மையும் இல்லை. ெசாப்னாவுடன் எந்த நட்பும் இருந்ததில்லை என்று நான் இதுவரை கூறியதில்லை. அவருடன் எனக்கு  நட்பு இருந்தது.  ஆனால் அவரது கிரிமினல் பின்புலம் குறித்து எனக்கு தெரியாது. அமீரக தூதரக  அதிகாரி என்ற முறையில் தான் அவருடன் எனக்கு பழக்கம் இருந்தது. தங்கம் கடத்தல் தொடர்பாக விசாரணை அமைப்புகள் என்னிடம் என்ன  எதிர்பார்க்கிறார்களோ அதை கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றார்.

Tags : Speaker ,Kerala , I have no connection with the gold smuggling gang: Interview with Kerala Speaker
× RELATED உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு,...