கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, போதை மருந்து சப்ளை டாக்டர் உள்பட 4 பேர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி முதலியார்பேட்டை 100 அடி சாலை தனியார் விடுதியில் கடந்த 5ம் தேதி போலீசார் ரெய்டு நடத்தி விபசார வழக்கில் 3 வாலிபர்கள் மற்றும் விடுதி உரிமையாளர், ரிசப்ஷனிஸ்ட் என 5 பேரை கைது செய்தனர். மற்றொரு  அறையில் மயங்கிய நிலையில் பெங்களூருவை சேர்ந்த நதாளி (25) என்ற ஐ.டி நிறுவன ஊழியரும், அவருடன் நெட்டப்பாக்கத்தை சேர்ந்த தேவநாதன் (23) என்பவரும் இருந்தது தெரியவந்தது. அவர்களது அறையில் கஞ்சா மற்றும் போதை  ஊசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா சப்ளை செய்யும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதில், ஆரோவில்லில் தங்கியுள்ள ரஷ்ய நாட்டை சேர்ந்த பள்ளி ஆசிரியர் இவான் கஞ்சா சப்ளை செய்தது  தெரியவந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில்,  புதுச்சேரி லாஸ்பேட்டை பெலிக்ஸ் (32), வில்லியனூரை சேர்ந்த பார்த்தசாரதி (23), மணிகண்டன் (29) ஆகியோர் கஞ்சா விற்றதும், புதுச்சேரியை சேர்ந்த ஜிப்மர் மயக்கவியல் டாக்டர்  துரையரசன் (29) அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கெட்டமைன் என்ற மயக்க மருந்தை சப்ளை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து 5 பாட்டில் கெட்டமைன் மயக்க  மருந்து, போதை ஊசிகள்,  போதை மாத்திரைகள், கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories:

>