×

நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது டெஸ்ட் இன்று தொடக்கம்: கேன் வில்லியம்சன்னுக்கு ஓய்வு

வெலிங்டன்: நியூசிலாந்து-வெஸ்ட்  இண்டீஸ் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய கேன் வில்லியம்சனுக்கு இந்த டெஸ்ட்டில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி   டி20 போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது. தொடர்ந்து நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் தோற்றது.  ஹாமில்டனில் நடந்த அந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து ஒரு இன்னிங்ஸ், 134ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. கேப்டன் வில்லியம்சன் 251 ரன் விளாசி இருந்தார். டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸட் இன்று வெலிங்டனில் தொடங்குகிறது. முதல் டெஸ்டில் வென்ற உற்சாகத்துடன் களம் காண்கிறது நியூசிலாந்து.  கூடவே இந்த டெஸ்ட்டையும்  வென்று வெஸ்ட் இண்டீசை  2-0 என் கணக்கில் ஒயிட் வாஷ் செய்ய காத்திருக்கிறது.

முதல் டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய கேப்டன் கேன் வில்லியம்சன்னுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் டாம் லாதம்  அணியின் கேப்டனாக இருப்பார். கூடவே வில்லியம்சன்னுக்கு பதிலாக 3வதாக வில்லியம் யங் களம்  காணுவார்.
வில்லியம்சன் இல்லாதது அணிக்கு சற்று பின்னடைவு என்றாலும் மற்ற வீரர்களை குறைத்து மதிப்பிட முடியாது. வில்லியம்சன் இல்லாமல் தான் டி20 தொடரை நியூசிலாந்து வென்றது. கேப்டன் லாதம், டெய்லர், போல்ட், டிம் சவுத்தி,  ஜெமிசன்  ஆகியோர்  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சவாலாக இருப்பார்கள். வெஸ்ட் இண்டீஸ் ஏற்கனவே டி20 தொடரை இழந்ததுடன், ஒரு டெஸ்ட்டில் தோற்றும் உள்ளது.  எனவே எஞ்சிய  ஒருப் போட்டியிலாவது வெல்ல வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் முனைப்புக் காட்டும்.

திறமையான வீரர்கள் இருந்தும்  முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் தோல்விதான் கிடைத்தது. எனவே கேப்டன் ஜேசன் ஹோல்டர் தலைமையிலான அணியில் உள்ள  ஜெர்மைன் பிளாக்வுட்,  ஷம்ரா பு₹்ஸ்,  கெமர் ரோச், அல்சாரி ஜோசப், பிராவோ, வாய்ப்பு கிடைத்தால்   ஹெட்மயர் ஆகியோர் சாதித்தால் தொடரை சமன் செய்யலாம்.  அதை நியூசிலாந்து அனுமதிக்குமா என்பது இன்று  தொடங்கும் போட்டியில் தெரியும். ஏற்கனவே இந்த இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 டெஸ்ட்களில் கடைசி 4  டெஸ்ட்களில் நியூசிலாந்துதான் வென்றுள்ளது.

கோஹ்லி வழியில் வில்லியம்சன்
மனைவிக்கு பேறுகாலம் என்பதால் முதல் டெஸ்ட் முடிந்ததும்  விராத் கோஹ்லி நாடு திரும்ப உள்ளார். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  கடைசி 3டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டார். ஆனால் அவருக்கு முன்ேப நியூசிலாந்து  கேப்டன் கேன் வில்லியம்சன் சொந்த ஊருக்கு திரும்பி விட்டார். அவரது மனைவி சாரா ரஹீமுக்கு இம்மாத இறுதியில் பேறுகாலம். அதனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் இருந்து ஓய்வளிக்கப் பட்டுள்ளது. எனவே வில்லியம்சன்  நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் உள்ள தவுரங்கா நகருக்கு சென்றுள்ளார்.  கூடவே இம்மாத இறுதியில் நடைபெற உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலும், முதல் டெஸ்ட் போட்டியிலும் வில்லியம்சன் பங்கேற்பது சந்தேகம்  என்கிறார்கள்.

Tags : New Zealand ,Test ,West Indies ,Kane Williamson , New Zealand - West Indies Second Test starts today: Kane Williamson retires
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்