×

தங்கம் விலையில் அதிரடி சரிவு ஒரு சவரனுக்கு ரூ.496 குறைந்தது: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை அதிரடியாக நேற்று ரூ.496 குறைந்தது. அதே நேரத்தில் சவரன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது. விலை குறைவு நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஒரு நிலையான நிலையில் இல்லாமல் ஏற்றம், இறக்கத்துடன் இருந்து வந்தது.  தங்கம் விலை “திடீரென” அதிகரித்தது நகை வாங்குவோரை கலக்கமடைய செய்தது. இந்த விலை உயர்வு ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று முன்தினம் தங்கம் விலை மீண்டும் சரிவை சந்தித்தது. கிராமுக்கு ரூ.24 குறைந்து ஒரு கிராம் ரூ.4,684க்கும், சவரனுக்கு ரூ.192 குறைந்து ஒரு சவரன் ரூ.37,472க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை மேலும் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. அதாவது கிராமுக்கு ரூ.39 குறைந்து ஒரு கிராம் ரூ.4,645க்கும், சவரனுக்கு ரூ.312 குறைந்து ஒரு சவரன் ரூ.37,160க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் சரிவை சந்தித்தது. மாலையில் நேற்று முன்தினம் விலையை விட கிராமுக்கு ரூ.62 குறைந்து ஒரு கிராம் ரூ4,622க்கும், சவரனுக்கு ரூ.496 குறைந்து ஒரு சவரன் ரூ.36,976க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை அதிரடியாக சரிவை சந்தித்துள்ளது நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை என தொடர்ச்சியாக வருகிறது. இந்த நேரத்தில் சவரன் ரூ.37,000த்துக்கு கீழ் குறைந்துள்ளது நகை வாங்குவோருக்கு கூடுதல் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : buyers , Gold prices plummet to Rs 496 per razor: Jewelry buyers happy
× RELATED இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120...