துணைவேந்தர் சூரப்பாவுக்கு அண்ணா பல்கலைகழக ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு: விசாரணை ஆணையத்திற்கு கடிதம்

சென்னை: துணைவேந்தர் சூரப்பாவுக்கு அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து, விசாரணை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்க தலைவர் அருள் அறம் கடிதத்தில் கூறியுள்ளதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணத்திற்காக மதிப்பெண் போடும் கலாச்சாரம் நிலவியது அதை முற்றிலும் ஒழித்தது துணைவேந்தர் சூரப்பா. அண்ணா பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் முன்பு அரசியல்வாதிகள் இருப்பதை காணமுடியும். சூரப்பா துணைவேந்தர் ஆன பிறகு காணப்படுவதில்லை. பல்கலைக்கழகத்தின் அனைத்து யுஜி, பிஜி திட்டங்களுக்கும் ஏஐசிடிஇ-ன் ஒப்புதல்கள் கிடைத்துள்ளது. தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக் கழகத்திற்கு கியூ.எஸ் தரவரிசை உயர்ந்துள்ளது. இதுபோன்ற ஏராளமான சாதனைகளை சூரப்பா நிகழ்த்தியுள்ளார். எனவே இந்த உண்மைகளை வைத்து விசாரணை குழு ஆராய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கடித்தத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>