×

கடும் சூறாவளியால் 3 அடி உயர ராட்சத அலை வெள்ளத்தில் மிதக்கும் வெனிஸ்

வெனிஸ்: இத்தாலியில் வெனிஸ் நகரில் காற்று, கன மழை மற்றும் கடல் நீர் புகுந்ததால் அந்த நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களின் ஒன்றான இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரம். இது, சிறு, சிறு தீவுகள் உள்ள சுற்றுலா விரும்பிகளுக்கு பிடித்தமான பகுதியாகும். கடும் காற்று, கனமழையால் இந்த நகரம் முழுவதும் தண்ணீரால்  சூழப்பட்டது. மோசமான வானிலை காரணமாக கடல் நீர் மட்டம் உயர்ந்து குடியிருப்புகளுக்கு தண்ணீர் புகுவது வழக்கமாகி விட்டது.

கடந்த ஆண்டு அலையின் கடும் தீவிரத்தால் வெனிஸ் நகரில் தண்ணீர் புகுந்து ஆறடி வெள்ளத்தில் மிதந்தது. இதனால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டது. வெனிஸில் கடல் நீர் புகுவதை  தடுப்பதற்காக அக்டோபரில் நகரின் பல இடங்களில் அதிநவீன வெள்ளத்தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டன. இதனால் வெள்ளம் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக கடல்  நீர்மட்டம் உயர்ந்தது.

இதனால் வெனிஸ் நகரம் மீண்டும் வெள்ளத்தில் மிதந்து வருகிறது. கனமழையுடன் பலத்த காற்றும் வீசியதால் கடலில் அலைகள் 3 அடி உயரத்திற்கு எழுந்து கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. நகரின் புனித மார்க் சதுக்கம் உள்ளிட்ட பல இடங்கள்  தண்ணீரில் மிதந்து வருகின்றன. அங்குள்ள மக்கள் நவீன உடையுடன் வலம் வருகின்றனர்.



Tags : Venice ,tidal wave ,hurricane , Venice floats in a 3-foot-high giant tidal wave caused by a severe hurricane
× RELATED வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான பாஜ...