×

மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவது கஷ்டம்: கொடுத்த வாய்ப்பை வீணடித்த சஞ்சு சாம்சன்

சிட்னி: இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் பல வருடங்களாக கஷ்டப்பட்ட கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் கொடுத்த வாய்ப்பை வீணடித்துவிட்டதாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டி 20 கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் இந்த தொடர் நடந்து முடிந்துள்ளது.  இந்த தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்த தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன்,  வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்கள், திறமையானவர்கள் என இந்த தொடரில்தான் கண்டுபிடிக்கப்பட்டனர். அதே வேளையில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் பல வருடங்களாக கஷ்டப்பட்ட கேரளாவை சேர்த்த வீரர் சஞ்சு  சாம்சனுக்கும் இந்த தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

 இதற்கு முன் சில போட்டிகளில் நன்றாக ஆடி இருந்தாலும் இந்த தொடரில் அவர் சரியாக ஆடவில்லை. இவர் மீது இந்திய அணி நிர்வாகம் பெரிய நம்பிக்கை வைத்து  இருந்தது. ஐபிஎல் தொடரில் இவரின் சிறப்பான ஆட்டத்தை பார்த்து இந்திய அணியிலும் இந்த முறை வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் இந்திய அணியில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் சரியாக ஆடவில்லை. மூன்று டி 20 போட்டிகளிலும் இவர் 20 ரன்களை கூட தாண்டவில்லை. களத்திற்கு வந்தவுடன் அவசர அவசரமாக சிக்ஸ், பவுண்டரி அடிக்கிறார். பின் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்துவிட்டு அவுட்டாகி விடுகிறார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது.  ஷ்ரேயஸ் அய்யருக்கும் முன்பாக இவரை களமிறக்கி கோலி இவருக்கு வாய்ப்புகளை  வாரி வழங்கினார்.

இவர் மீதான நம்பிக்கையால்தான் ஷ்ரேயஸ் அய்யருக்கும்  முன்பாக இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவருக்கு இவ்வளவு சிறப்பான வாய்ப்புகள் வழங்கப்பட்ட பின்பும் கூட சஞ்சு சாம்சன் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.  இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இவர் பல மாதங்கள் புலம்பி இருக்கிறார். கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் விமர்சகர்கள் பலர் இவருக்காக இணையத்தில் வரிந்து கட்டிக்கொண்டு பேசி உள்ளனர்.

ஆனால் இப்போது வாய்ப்பு  கிடைத்தும் அவர் அதை சரியாக பயன்படுத்தவில்லை. இவர் ஆடும் 4வது இடத்தில் களமிறங்க இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ், மணீஷ் பாண்டே, பண்ட் என்று பல வீரர்கள் இருக்கிறார்கள். இதுபோன்று தொடர்ந்து சரியாக ஆடவில்லை  என்றால் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் கிடைப்பது குதிரை கொம்புதான். அதோடு கிரிக்கெட் கெரியரே காலியாகிவிடும் சூழ்நிலைக்கு சஞ்சுசாம்சன் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றே கிரிக்கெட் விமர்சகர்கள்  கூறுகின்றனர்.



Tags : Sanju Samson ,team ,Indian , It will be difficult to feature in the Indian team again: Sanju Samson who wasted the opportunity given
× RELATED வெற்றியை தொடருமா ராஜஸ்தான்? குஜராத்துடன் இன்று மோதல்