தேவாரம் மலையடிவாரத்தில் மீண்டும்... மக்னா: தொழிலாளர்கள் அச்சம்

தேவாரம்: தேவாரம் மலையடிவாரத்தில் ஒற்றையாக திரியும் மக்னா யானை இதுவரை 13 தோட்ட தொழிலாளர்களை கொன்றுள்ளது. இதனை பிடிக்க கோரி விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி விட்டனர். ஆனால் யானையை பிடிக்க இதுவரை எந்த தீவிரமும் காட்டவில்லை. மக்னா யானையை பிடிக்க, நீலகிரியில் இருந்து 2 முறை கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டது. ஆனால் பலன் அளிக்காததால் அவை மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மக்னா யானை தேவாரம் மலையடிவாரத்தில் ஹாயாக சுற்றி வருகிறது. நேற்று துளுவன் துள்ளிமேடு என்ற இடத்தில் உள்ள தென்னந்தோப்பில் மக்னா யானை உலா வந்தது.

இதை கண்டு வேலைக்கு சென்றவர்கள் ஓட்டம் பிடிக்க, சிலர் செல்போனில் படம் பிடித்தனர். தகவலறிந்ததும் தேவாரம் வனத்துறை பட்டாசுகளை போட்டு மக்னாவை விரட்டினர். தற்போது மலையடிவாரத்தை ஒட்டியுள்ள எள்ளுப்பாறை என்ற இடத்தில் மக்னா முகாமிட்டு உள்ளது. இதனால் விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Related Stories: