நடிகை சித்ரா கொலை விவகாரம்: ஹேம்நாத், உறவினர்கள், நண்பர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்ப முடிவு: மூன்று கோணங்களில் விசாரணை

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து சித்ராவின் கணவர் ஹேம்நாத், உறவினர்களுக்கு காவல்துறை சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது. படப்பிடிப்பின்போது சித்ராவுடன் நெருக்கமாக இருந்தவர்களையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சித்ராவின் செல்போனில் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சித்ராவின் நண்பர்கள், உறவினர்களிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை சித்ரா உடலுக்கு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று காலை 10 மணிக்கு உடல் கூறாய்வு செய்யப்படுகிறது. அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. அதனால் முகத்தில் காயம் இருப்பதால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் எழுந்துள்ளன. அதன் முடிவுகள் வெளியான பிறகு, சித்ரா கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்தாரா என்பது உறுதியாக தெரியவரும். அதேநேரம் போலீசார் மூன்று கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ரா-ஹேம்நாத் பெற்றோர் இடையே மோதல்:

ஹேமந்த் பெற்றோருடன் சித்ராவுக்கு தகராறு ஏற்பட்டதால்தான் இவர் நட்சத்திர ஹோட்டலுக்கு இடம் பெயர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், ஹேமந்த் நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று உள்ளார். இந்த நிலையில்தான் சித்ரா மரணமடைந்துள்ளார். குடும்ப பிரச்சினைகள் பல இருப்பதால் இது கொலையாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆர்டிஓ விசாரணை:

திருவள்ளூர் ஆர்டிஓ, லாவண்யா, சித்ரா உடல் வைக்கப்பட்ட கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது உடலை பார்வையிட்டார். திருமணம் ஆகி 7 ஆண்டுகள் முடிவடையவில்லை என்பதால் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சித்ரா கணவர் நல்லவர் இல்லை.. எல்லா பெண்களுடனும் பழகுவார்:

நடிகை சித்ரா தப்பானவரை செலக்ட் பண்ணிட்டா. ஹேம்நாத் நல்லவரே கிடையாது. அவர் இதுவரை போகாத நைட் கிளப்புகளே இல்லை என சித்ராவின் தோழியும் நடிகையுமான ரேகா நாயர் தெரிவித்துள்ளார். சித்ரா எப்பவுமே ஜாலியாக இருப்பார். அவர் இதுவரை அவருடைய தனிப்பட்ட விஷயத்தை யாரிடமும் பகிர்ந்ததில்லை என கூறினார். இப்படியிருந்தும் அவரது பெற்றோருக்கு தெரியாமல் பாட்டு, டான்ஸ் ஆகியவற்றை தனது சொந்த பணத்தில் கற்றுக் கொண்டார். ஹேம்நாத் எல்லா கிளப்புகளுக்கும் எல்லா பப்புகளுக்கும் செல்வார். இந்த விஷயம் சித்ராவுக்கு நன்றாக தெரியும். ஆனால் இவரை காதலித்து திருமணம் செய்தது ஏன் என தெரியவில்லை என கூறினார். ஹேம்நாத் போகாத இரவு நேர பப்பே இல்லை என கூறினார்.

Related Stories:

>