×

கூகுள் தேடலில் முதலிடம் கொரோனாவையும் மிஞ்சிய ஐபிஎல்

புதுடெல்லி: இந்த ஆண்டு கூகுளில். கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை காட்டிலும் ஐபிஎல் போட்டி விவரங்கள் தான் அதிக அளவில் தேடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவில் அதிகம் என்பது இந்த ஆண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட செய்திகள் குறித்த பட்டியலை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் மக்கள் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி குறித்து அதிகம் தேடியுள்ளனர். கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்தியாக ஐபிஎல் உள்ளது. கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தல் காரணமாக 13வது ஐபிஎல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி நவம்பர் 10ம் தேதி வரை நடந்தது. கடந்த ஆண்டு போட்டியுடள் ஒப்பிடும்போது சுமார் 28 சதவீதம் பேர் பார்வையாளர்கள் அந்த ஆண்டு அதிகரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்தியாக ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை போட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டியை தொடர்ந்து கொரோனா வைரஸ், அமெரிக்க தேர்தல், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம், பீகார் மற்றும் டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்தும் கூகுளில் அதிகம தேடப்பட்டுள்ளது. நிர்பயா வழக்கு, கொரோனா லாக்-டவுன், இந்தியா-சீனா மோதல், ராமர்கோயில் உள்ளிட்ட செய்திகளும் அதிகம் தேடப்பட்ட முதல் 10 செய்திகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் பட்டியலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பிடென் முதலிடத்தில் இருக்கிறார். தொடர்ந்து பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி, பாடகி கனிகா காபூர் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Tags : IPL ,Corona , IPL surpasses Corona tops Google search
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி