×

ஹேம்நாத் எப்படிப்பட்டவர்? சித்ராவின் தோழி திடுக் தகவல்

நடிகை சித்ராவின் தோழியும், அவருடன் இணைந்து டி.வி தொடர் மற்றும் விளம்பர படங்களில் நடித்தவருமான நடிகை ரேகா நாயர் நேற்று அளித்த வீடியோ பேட்டி: என் லவ்வர் பாய்பிரண்டா இருந்த ஹேம்நாத் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். வெளிப்படையாக சொன்னால், அவன் நல்ல பையனே கிடையாது. என்கேஜ்மென்ட் முடிந்தவுடன் எடுத்த போட்டோவை நான் பார்த்தவுடனே என் பிரெண்டுகளிடம் சொன்னது, சித்ரா நீ எவ்வளவோ கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறாய். சரி எது, தப்பு எது என்று எல்லாவற்றையும் கடந்து வந்துவிட்டாய். ஆனால், இப்போது நீ தேர்வு செய்திருக்கும் நபர் சரியான ஆள் இல்லை என்று சொன்னேன். கிட்டத்தட்ட சென்னையில் இருக்கும் பாதி பெண்களுக்கு அவனை தெரிந்திருக்க வாய்ப்புண்டு. அவன் வராத கிளப்புகளே கிடையாது. கலந்துகொள்ளாத பார்ட்டிகளே கிடையாது. பப்புகளே கிடையாது. எல்லா இடத்துக்கும் வருவான். எல்லா பெண்களிடமும் பேசுவான். இந்த விஷயங்கள் எல்லாம் சித்ராவுக்கும் தெரியும், அவன் நல்ல பையன் இல்லை என்றும் தெரியும்.

அவன் எங்கே இருந்தாலும் அடிக்கடி சித்ராவுக்கு போன் செய்துகொண்டே இருப்பான். நீ எங்கே இருக்கிறாய், யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டுக்கொண்டே இருப்பான். இதனால் சித்ரா எப்போது பார்த்தாலும் பரபரப்பாகவே, பதற்றமாகவே இருப்பாள். இயல்பாகவே காதலிப்பவர்கள் ஒன்றாக குளிப்பார்கள், ஒன்றாகவே சாப்பிடுவார்கள். இவர்கள் லவ்வர்ஸ். நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது. கணவன், மனைவியாகவும் வாழ்ந்தார்கள். அப்படி இருக்கும்போது, அவன் ஏன் சித்ராவை வெளியே அனுப்ப வேண்டும். சித்ரா ஏன் வெளியே வர வேண்டும், என்னை பொறுத்தவரை சித்ரா விஷயம் தற்கொலையாக தெரியவில்லை. அவள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவே தெரிகிறது. அதுவும் ஒருவித கொலைதான் என்று தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Tags : Homnath ,Tiduk ,Chitra , What is Homnath like? Chitra's friend Tiduk informed
× RELATED சித்ரா பௌர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?