×

எடப்பாடி தங்கிய ரிசார்ட்டில் சோதனைக்கு சென்ற அதிகாரிகள்: அதிமுகவினர் தடுத்ததால் பரபரப்பு

அதிமுக வேட்பாளர் தென்னரசை ஆதரித்து கடந்த 3  நாட்களாக எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள  ஒரு ரிசார்ட்டில் அவர் தங்கி இருந்தார். நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு மதியம்  அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவர் புறப்பட்ட சிறிது  நேரத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் ரிசார்ட்டிற்குள் சோதனை  நடத்த சென்றனர்.  இதை கண்ட அதிமுகவினர் தேர்தல் அதிகாரிகளை விடாமல்  தடுத்து நிறுத்தி ரிசார்ட் அமைந்துள்ள இடம் ஈரோடு மேற்கு தொகுதி என்பதால்  சோதனை நடத்தக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து  அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு சிறிது  நேரம் பரபரப்பு ஏற்பட்டது. …

The post எடப்பாடி தங்கிய ரிசார்ட்டில் சோதனைக்கு சென்ற அதிகாரிகள்: அதிமுகவினர் தடுத்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Edappadi ,AIADMK ,Edappadi Palaniswami ,Villarasambatti ,road ,Dinakaran ,
× RELATED தொடர் தோல்விகளால் அதிருப்தி எடப்பாடி...