×

தாசில்தார்களின் குறைந்தபட்ச மாத சம்பளம் 37,700 ரூபாய்

சென்னை, :வருவாய்த்துறையில் பணியாற்றும் தாசில்தார்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ₹37,700 ஆக  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில், ஊதிய குறை தீர்க்கும் குழு சார்பில்  பல்வேறு துறைகளின் ஊழியர்களுக்கு ஊதிய கட்டமைப்பில் உள்ள குறைபாடு தொடர்பாக, தனி நபர்கள் மற்றும் பணியாளர் சங்கங்களிடம் தனித்தனியாக மனுக்கள் பெறப்பட்டது.

இந்நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி மாவட்ட கலெக்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
தாசில்தாருக்கு அடிப்படை தர ஊதியம்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ₹37,700 முதல் 1,19500 வரை மாத ஊதியம் கிடைக்கும். இந்த ஊதியம் மறு சீரமைப்பை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களும் ஜனவரி 31ம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கான பணியை முறையாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும், பிப்ரவரி 5ம் தேதிக்குள் பணிகளை முடிக்காமல், ஊதியம் மறு சீரமைப்பு பணிகளில் காலம் தாழ்த்தும் அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த மறு நிர்ணய ஊதியம் நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் முன்மொழிவுகள் தயார் செய்து ஊதியம் ெசய்யும் அலுவலரான சம்பந்தப்பட்ட சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர்கள் மூலம் ஊதியம் மறு நிர்ணயம் செய்து மாநில கணக்காயருக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Tags : waiter , Tasildar, minimum monthly salary
× RELATED ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தாரிடம் மனு