×

வேற்றுகிரகவாசிகளின் கூட்டமைப்புடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ விண்வெளிப்பிரிவின் முன்னாள் தலைவர் தகவல்..!

வாஷிங்டன்: அமெரிக்கா, வேற்றுகிரகவாசிகளின் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ விண்வெளிப்பிரிவின் முன்னாள் தலைவர் ஹைம் எஷெட் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். வேற்றுகிரகவாசிகள் இருப்பது உண்மைதான் என்றும், அவர்களுக்கான ஒரு கூட்டமைப்பு இயங்கி வருகிறது என்றும் கூறியுள்ள ஷெட், வேற்றுகிரகவாசிகளுடனான தகவல் தொடர்பு முன்னரே தொடங்கி விட்டதாகவும், பூமியில் சோதனை நடத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் அவர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, இது பூமியை வேற்றுகிரகவாசிகள் ஆக்கிரமிப்பதற்கான முயற்சி அல்ல. பிரபஞ்ச விதிகளை புரிந்து கொள்வதற்கான தேடலில் அவர்கள் மனித குலத்தையும் உதவியாக சேர்த்துக் கொள்ள விரும்புகின்றனர். வேற்றுகிரகவாசிகள் குறித்த தகவலை வெளியிட டிரம்ப் முயற்சித்தார். ஆனால் மக்கள் அதற்கு தயாராகவில்லை என்று வேற்றுகிரகவாசிகள் தடுத்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. மனிதகுலம் விண்வெளி மற்றும் விண்கலங்கள் என்ன என்பதை பொதுவாக நாம் புரிந்துகொள்ளும் ஒரு கட்டத்தை அடைவதற்கு அவர்கள் காத்திருக்கிறார்கள் என கூறினார்.

ஹைம் எஷெட் , 1981 முதல் 2010 வரை இஸ்ரேலின் விண்வெளி பாதுகாப்புத் திட்டத்திற்கு தலைமை தாங்கி உள்ளார். செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகளுடன் இணைந்து அமெரிக்கா ஒரு நிலத்தடி தளத்தை அமைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : head ,Israeli ,US ,Aliens Federation , Aliens, Confederation, USA, Information
× RELATED சென்னை மதுரவாயல் அருகே தாக்குதலில்...