×

நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்க... பல ஆண்டுகள் பொதுச்சேவை புரிக... சோனியா காந்திக்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

புதுடெல்லி, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் மற்றும் நோய்த்தொற்று ஏற்படுத்திய துயரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்திருந்தார். இதனால் சோனியா காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால், அனைத்து மாநிலத் தலைவர்களிடமும் கேட்டுக் கொண்டார்.

இருந்தும், சோனியா காந்திக்கு டுவிட்டர் வழியாக பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்தும், அவர் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்தினார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது பதிவில், ‘காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் - சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில், பதிவிட்டுள்ள, பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி விவரம் பின்வருமாறு:

காங்கிரஸ் தலைவர் அன்னை திருமதி. சோனியா காந்தி அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக, இந்தியாவை, நவீன, முற்போக்கு மற்றும் மதச்சார்பற்ற நாடாக மாற்றுவதில் முக்கியப் பங்காற்றியவர்.மேலும் பல ஆண்டுகள் அவர் பொதுச்சேவை புரிய வாழ்த்துகிறேன், எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Modi ,Sonia Gandhi ,greetings ,MK Stalin , Congratulations to Sonia Gandhi, Prime Minister Modi, MK Stalin
× RELATED அமேதியில் போட்டியிட ராகுல்...