சென்னையில் குண்டும் குழியுமாக மாறிய சாலைகள்: பள்ளம் தெரியாமல் தவறி விழுந்து பலியாகும் சோகம்

சென்னை: சென்னையில் மழையால் சேதமடைந்துள்ள சாலைகள் உயிர்ப்பலி வாங்குவதாக மாறிவிட்டன. 2 நாட்களுக்கு முன் மதுரவாயல் - இரும்புலியூர் புறவழிச்சாலை சர்வீஸ் சாலை ஓர வடிகாலில் 2 பேர் மூழ்கினர். மருத்துவர் கரோலின் பிரிசில்லா(50), அவரது மகள் எஸ்வின் 2 பேரும் ஸ்கூட்டரில் சென்ற போது விபத்து ஏற்பட்டது. மழை நீர் நிரம்பி இருந்ததால் திறந்திருந்த கால்வாயில் ஸ்கூட்டருடன் விழுந்து தாய், மகள் உயிரிழந்தனர். இன்று காலையில் கோடம்பாக்கத்தில் நீர் தேங்கி இருந்ததால் பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து நரசிம்மன் என்பவர் உயிரிழந்தார்.

Related Stories:

>