×

கமுதி அருகே தெருக்களில் ஓடும் கழிவுநீர்: தொற்றுநோய் பரவும் அபாயம்

கமுதி: கமுதி அருகே உள்ள தெருக்களில் ஓடும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கமுதி அருகே என்.கரிசல்குளம் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள தெருக்களில் கழிவுநீர் பல நாள்களாக தேங்கி துர்நாற்றறம் வீசுகிறது. இதுவரை எந்த தெருக்களிலும் சாலை, கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட வில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீரோடு கழிவுநீரும் கலந்து தெருக்களில் தேங்கிக் கிடக்கிறது.

இதனால் மலேரியா, டைப்பாய்டு மற்றும் தொற்றுநோய் பரவும் என அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் என். கரிசல்குளம் கிராமத்தில் தெருக்களில் சிமென்ட் சாலை, பேவர்பிளாக் சாலை, கழிவுநீர் கால்வாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : streets ,Kamuti , Infectious
× RELATED அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த...