விண்கல்லின் மாதிரியை பூமிக்கு எடுத்து வரும் திட்டத்தை ஜப்பான் வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறது.கடந்த 2014 ஆம் ஆண்டு இதற்காக ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் ஹயபுசா 2 என்ற விண்கலம் ஒன்றை, ரியுகு (( ryugu ))என்ற விண்கல்லுக்கு அனுப்பியது.கிட்டத்தட்ட அரை மைல் அகலம் கொண்ட அந்த கல், சூரியனில் இருந்து 21 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பிப்ரவரி மாதம் விண்கலம் அந்த விண்கல்லில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை 2 மாதங்கள் ஆய்வு செய்தது.
பின்னர் வெடிபொருள் பயன்படுத்தி துளைத்தெடுத்து சேகரித்த அதன் மாதிரியை விண்கலம் விடுவித்தது. பூமியை நோக்கி எரியும் பந்து போல் வந்த கேப்சூல் ஆஸ்திரேலியாவில் சனிக்கிழமை பத்திரமாக தரையிறங்கியது. சூரிய குடும்பத்தின் ஆரம்பம் எப்படி இருந்தது, பூமியில் எவ்வாறு உயிரினங்கள் தோன்றின போன்ற ஆய்வுகளை கண்டறிய உதவும் இந்த விண்கல் மாதிரி உதவும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.