×

அந்தியூர் அருகே முதுமக்கள் தாழி, எலும்புகள் கண்டுபிடிப்பு

அந்தியூர்: அந்தியூர் அருகே முதுமக்கள் பயன்படுத்திய தாழி, எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பட்லூர் ஊராட்சிக்குட்பட்ட மொசுகவுண்டனூர் காலனியில், சிறு பாலம் கட்டுவதற்காக பணிகள் நடந்தது. நேற்று பெக்லைன் இயந்திரத்துடன் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் 5 அடி ஆழத்திற்கு குழி தோண்டினர். அந்த குழியில் ஏதோ பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அந்த பொருட்களை எடுத்து பார்த்தபோது, அவை முதுமக்களின் தாழி, எலும்பு துண்டுகள் என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தாழிகள் மற்றும் எலும்பு துண்டுகள் உடைந்த நிலையில் இருந்தது.

இது குறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அங்கே சென்ற வி.ஏ.ஒ. செல்வராஜ் மற்றும் அந்தியூர் துணை தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் அந்த பொருட்களை சேகரித்தனர். மேலும் எந்த ஆண்டு பயன்படுத்திய தாழி?, எந்த ஆண்டு வாழ்ந்த மனிதரின் எலும்புகள்? என்பது குறித்து அறிய தொல்லியல் துறையின் ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது. ஆய்வுக்கு பின்னர் மற்ற விவரங்கள் தெரியவரும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Anthiyur , Anthiyur
× RELATED சட்டவிரோத மது விற்பனை; 8 பேர் கைது