ஆண் நண்பருடன் ஊர்சுற்றிய பெண் கடத்தல் நாடகம்: போலீசார் எச்சரிக்கை

சென்னை: சென்னை மதுரவாயலை சேர்ந்த 21 வயதுடைய  இளம் பெண் நேற்று முன்தினம் நள்ளிரவு தன்னை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றதாகவும். கடத்தல்காரர்கள் கத்தியை காட்டி மிரட்டினர். பின்பு தன்னை தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் இறக்கி விட்டு சென்று விட்டதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டனர். அந்த பெண்ணை பாதுகாப்பாக அவரது பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். மேலும் அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். அந்தப் பெண் நள்ளிரவு ஒரு மணி வரை அவரது ஆண் நண்பருடன் செல்போனில் சாட் செய்தது தெரியவந்தது. அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை செய்தபோது தனது ஆண் நண்பருடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வந்ததாகவும் இந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்தால் பெற்றோர் கண்டிப்பார்கள் என்ற காரணத்தால் தன்னை சிலர் கடத்திச் சென்றதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>