சட்டமன்ற பொதுத்தேர்தல் தொடர்பாக 14ம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

சென்னை: சட்டமன்றத்தேர்தல் சம்பந்தமாக வரும் 14ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளனர். இதுகுறித்து இருவரும் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கட்சி தலைமையகத்தில் வருகின்ற 14ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 4.30 மணிக்கு மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 20ம் தேதி அன்று தலைமை கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தின் போது, சட்டமன்றப் பொதுத்தேர்தல் சம்பந்தமாக என்னென்ன பணிகளைச் செய்ய வேண்டும் என்பது குறித்து வழங்கப்பட்ட ஆலோசனைகளின்படி தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்த அனைத்து விபரங்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>