×

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா காலமானார்

சென்னை: சேலத்தை சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர், எஸ்.ஆர்.ராதா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது (87). உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று காலை சிகிச்சை பலன் இன்றி காலமானார்.

அவரது விருப்பத்தின்படி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கப்படுவதாக மகன் எஸ்.ஆர்.ஆனந்தன் தெரிவித்துள்ளார். எஸ்.ஆர்.ராதா 1977ம் ஆண்டு எம்ஜிஆர் அமைச்சரவையில் கைத்தறி துறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும், பின்னர் 1989ம் ஆண்டு அதிமுகவின் சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவரது மறைவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

Tags : Radha ,AIADMK , Former AIADMK minister SR Radha passes away
× RELATED பிட் காயினில் முதலீடு விவகாரம் ரியல்...