×

கொடைக்கானல் கீழ்மலையில் காட்டாற்று வெள்ளம் 3 மலைக்கிராமங்கள் தனித்தீவானது: தத்தளித்த தொழிலாளர்கள் கயிறு கட்டி மீட்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் 3 மலைக்கிராமங்கள் தனித்தீவானது. இதனால் தோட்ட வேலைக்கு சென்று ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தவர்களை கயிறு கட்டி மீட்டனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலையில் செம்பரான்குளம், பட்டிக்காடு, கருவேலம்பட்டி, பாச்சலூர் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு 1,000க்கும் மேற்பட்ட ஆதிவாசி இன மக்கள் வசித்து வருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் செம்பரான்குளம் கிராம மக்கள் தோட்ட வேலைக்கு சென்றனர். மாலையில் வேலை முடிந்து வரும்போது கனமழை பெய்தது. இதனால் பாச்சலூரில் இருந்து செம்பரான்குளம் கிராமத்திற்கு செல்லக்கூடிய தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியது. இதையடுத்து தோட்ட வேலைக்கு சென்றவர்கள் தத்தளித்தனர். அவர்களை, அப்பகுதியை சேர்ந்த மக்கள் கயிறு கட்டி மீட்டனர். வெள்ளத்தால் செம்பரான்குளம், பாச்சலூர், கருவேலம்பட்டி மலைக்கிராமங்கள் தனித்தீவு போல மாறி உள்ளன.


Tags : floods ,foothills ,Kodaikanal , Wildfires in Kodaikanal foothills 3 hill villages isolated
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து...