×

தெலங்கானாவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் 850 ஆக குறைப்பு

ஐதராபாத்: தெலங்கானாவில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் ரூ.2200ல் இருந்து ரூ.850ஆக குறைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றை கண்டறிவதற்கான  பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் அதிகம் செலவு ஆவதால் பரிசோதனை செய்துகொள்ள மக்கள் தயங்குகிறார்கள். இந்நிலையில், தெலங்கானாவில் கொரோனாவை கண்டறியும் ஆர்டி-பிசிஆர்  பரிசோதனைக்கான கட்டணங்களை அரசு அதிரடியாக குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. ரூ.2200 ஆக இருந்த கட்டணத்தை அரசு ரூ.850ஆக குறைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சாதாரண மக்களும் கொரோனா நோய்  தொற்று பரிசோதனையை மிகவும் எளிதாகவும், உடனடியாகவும் செய்து கொள்ள முடியும்.

இதேபோல் வீடுகளில் வந்து மாதிரிகள் சேகரித்து எடுத்து சென்றால் அதற்காக ரூ.2800 கட்டணமாக பெறப்பட்டது. இந்த கட்டணத்தை அரசு ரூ.1200ஆக குறைத்துள்ளது. அனைத்து மருத்துவமனைகள், நிறுவனங்கள், ஆய்வகங்களில்  திருத்தியமைக்கப்பட்ட கட்டண விவரத்தை மக்கள் பார்வைக்கு வைக்கும்படியும். அவ்வாறு தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது. அதே  நேரத்தில் அரசு தரப்பில், இலவச கொரோனா பரிசோதனைகளும் செய்யப்படுகின்றது.


Tags : Corona ,Telangana ,hospitals , Corona examination fee reduced to Rs 850 in private hospitals in Telangana
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து