×

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் மீட்கப்பட்ட சிலைகளை தொல்லியல்துறை ஆய்வு

ஆலந்தூர்:  தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சுவாமி சிலைகளை தமிழக சிலை கடத்தல்  தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர். அதன்படி கைப்பற்றப்பட்ட சிவன், விஷ்ணு, பெருமாள், விநாயகர் உள்ளிட்ட 22 கற்சிலைகள், 17  பஞ்லோக சுவாமி சிலைகள் ஆகியவை கிண்டி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகளின் வரலாறு, எந்த நூற்றாண்டு காலத்து சிலைகள் ஆகியவை குறித்து  ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல்  செய்வதற்காக, மத்திய தொல்லியல் துறையின்  தென்மண்டல இயக்குனர் மகேஸ்வரி, ஓய்வுபெற்ற தொல்லியல் இயக்குனர் தயாளன், ஓய்வுபெற்ற தொல்லியல் துறை சூப்பிரண்டு சத்தியமூர்த்தி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பேராசியர்  ஷீலா, ஓய்வுபெற்ற அதிகாரி பாலசுப்பிரமணி ஆகியோர் நேற்று நேரில்  ஆய்வு செய்தனர். பழமையான இந்த சிலைகள் தமிழகத்தில் உள்ள எந்த கோயில்களுக்கு சொந்தமானது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.



Tags : idols ,unit , Archaeological excavation of the recovered idols on behalf of the Idol Smuggling Prevention Unit
× RELATED போதைப்பொருள் தடுப்புப் பிரிவு...