மாகரல் எஸ்ஐ சஸ்பெண்ட்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் காவல்நிலையத்தில் எஸ்ஐயாக வேலை பார்ப்பவர் கிஷோர்குமார். இந்த காவல் நிலையம், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ளது. மாகரல் காவல் நிலையத்தில் புகார் அளிக்க  வரும் பொதுமக்களிடம் எஸ்ஐ கிஷோர்குமார் கடுமையாக நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும், கிரஷர் உரிமையாளர்களை மிரட்டுவது, பொதுமக்களிடம் அடாவடியாக நடந்துகொள்வது என அவர் மீது 25 க்கும் மேற்பட்ட புகார்கள்  வந்தன. இதையடுத்து, அவர் மீது விசாரணை நடத்திய எஸ்பி சண்முகப்பிரியா, எஸ்ஐ கிஷோர்குமாரை சல்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Stories: