×

கொரோனாவின் சுவடு தெரியாமல் மாறிப்போன வூகான்!: இயல்பு நிலையில் மக்கள்..தவளை, மீன்கள் விற்பனையில் மீண்டும் 'வெட் மார்க்கெட்'..!!

வூகான்: கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு சீனாவின் வூகான் நகரத்தில் இதே தேதியில் தான் கண்டறியப்பட்டது. வூகானில் வெடித்து கிளம்பிய கொரோனா கொல்லுயிரி தற்போது 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பெருந்தொற்றாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா தாக்கத்தில் இருந்து வூகான் நகரம் பெருமளவில் மீண்டிருக்கிறது. சீனாவின் வூகான் மாநகரம், பல்வேறு நாடுகளில் வியமித்திருக்கும் கொரோனா பெருந்தொற்று இங்கிருந்து தான் பரவியதாக கூறப்படுகிறது. உலக நாடுகள் பல கொரோனா தொற்றின் 2ம் அலையில் சிக்கியுள்ள நிலையில், வூகான் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பியிருக்கிறது. அங்குள்ள யாங்கேஸ் ஆற்றுப்பாலம் முழுவதும் வாகன போக்குவரத்தால் நிரம்பி வழிகிறது. கொரோனா வெடித்து கிளம்பிய இடமான வெட் மார்க்கெட்டில் தவளைகள், மீன்கள் மற்றும் இறைச்சி வியாபாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.

கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்னர் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட அடையாளமே தெரியாத மாநிலமாக ஹூபே மாநிலம். பல மாதங்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படாத நிலையில், அங்குள்ள பூங்காக்கள் நடன குழுவினரின் கொண்டாட்டத்தால் நிறைந்துள்ளன. ஹூபே மாநிலத்தில் தற்போது ஊரடங்கு இல்லை. பள்ளிகள், கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் என அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டது. வீதிகளிலும், சாலைகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இருப்பினும் பாதுகாப்பிற்காக முகக்கவச பயன்பாடு இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் பிறப்பிடமாக இருந்த வூகானில் இயல்பு நிலை திரும்பிய போதிலும், உலக நாடுகள் இன்னும் கொரோனா தொற்றின் 2ம் அலையில் சிக்கி மீளாமல் தவித்து வருகின்றன.


Tags : Corona, Wokan, Nature, People..Frog, Fish, Sales, Wet Market
× RELATED மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலம் மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் நாளை பதவியேற்பு