397 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21ல் நெருக்கமாக வரும் வியாழனும் சனியும்!!

சுமார் 397 ஆண்டுகளுக்கு பிறகு சூரிய குடும்பத்தில் ஐந்தாவது கோளான வியாழனும், ஆறாவது கோளான சனியும் டிசம்பர் 21ம் தேதி நெருக்கமாக வர உள்ளது. அவை காண்பதற்கு ஒரு பிரகாசமான நட்சத்திரம் போல் இருக்கும். 1623ம் ஆண்டு இதேபோல் வியாழன் கிரகமும், சனி கிரகமும் மிக நெருக்கமாக வந்ததாக கூறப்படுகிறது.

டிசம்பர் 21, 2020ம் ஆண்டுக்கு பிறகு வியாழன் மற்றும் சனி கிரகங்கள் 2080ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி நெருக்கமாக வரும் என கணிக்கப்படுகிறது.  சனி மற்றும் வியாழன் கிரகம் நெருக்கமாக வரும் நிகழ்வை இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான முக்கிய நகரங்களில், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு காணலாம் என கூறப்படுகிறது.

Related Stories: