×

பாரத் பந்த் போராட்டத்திற்கு நடுவே ட்விட்டரில் டிரெண்டாகும் #ThankYouPMModi.. பின்னணி என்ன..?

டெல்லி : ட்விட்டரில் இன்று #ThankYouPMModi எனும் ஹாஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதன் கீழ் ஆயிரக்கணக்கான ட்விட்டர் பயனர்கள், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு அங்கீகாரம் பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டு வருகின்றனர். முன்னதாக நேற்று, ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாடு (யுஎன்சிடிஏடி) ஐக்கிய நாடுகளின் முதலீட்டு ஊக்குவிப்பு விருது 2020’ன் வெற்றியாளராக இன்வெஸ்ட் இந்தியாவை அறிவித்தது.

இதையடுத்து 2020 ஐக்கிய நாடுகளின் முதலீட்டு ஊக்குவிப்பு விருதை வென்ற இன்வெஸ்ட் இந்தியாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில்,“வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின், 2020 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் முதலீட்டு மேம்பாட்டு விருதை வென்றுள்ள முதலீட்டு இந்தியா நிறுவனத்திற்கு எனது வாழ்த்துகள். உலகளவில், முதலீடு செய்வதற்கு விரும்பத்தக்க இடமாக இந்தியாவை உருவாக்கியிருப்பதற்கும், எளிதாக தொழில் செய்வதற்கு ஏற்ற நாடாக ஆக்குவதற்கும் நமது அரசு மேற்கொண்ட குவிந்த முயற்சிகளுக்கு இதுவே சாட்சியமாகத் திகழ்கிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு அங்கீகாரம் பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து ஆயிரக்கணக்கான ட்விட்டர் பயனர்கள்,  #ThankYouPMModi ஹாஷ்டேக்கில் ட்வீட் போட்டு வருகின்றனர்.


Tags : Bharat Bandh , Bharat Bandh, struggle, Twitter, background
× RELATED தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு...