திருப்பதி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 33,448 பேர் சாமி தரிசனம்: ஒரே நாளில் 2 கோடியை தாண்டியது உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி கோவிலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 33,448 பேர் சாமி தரிசனம் செய்தனர். 11 ஆயிரத்து 455 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.25 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பக்தர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். வெளிமாநில பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். முதலில் 6 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்த்தப்பட்டு தற்போது 30 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

உண்டியல் காணிக்கையும் முதலில் ரூ.1 கோடிக்கும் குறைவாகதான் வசூலானது. தற்போது உண்டியல் காணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 33,448 பேர் தரிசனம் செய்தனர். 11 ஆயிரத்து 455 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.25 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேற்று 30,098 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 10,029 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.10 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் அதிகபட்சமாக கடந்த மாதம் ஒரே நாளில் ரூ.2.62 கோடி உண்டியல் வசூலானது. அதற்கு பிறகு உண்டியல் காணிக்கை குறைவாகதான் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் உண்டியல் காணிக்கை 2 நாட்களாக ரூ.2 கோடியை தாண்டி வசூலாகியுள்ளது.

Related Stories:

>