×

இதயமற்ற நரேந்திர மோடி... குஜராத்தி இந்துத்துவத்தால் ஈர்க்கப்பட்ட பாஜக அரசுக்கு பஞ்சாபி விவசாயிகள் மீது அக்கறை இல்லை : பாகிஸ்தான் அமைச்சர் சர்ச்சை கருத்து!!

இஸ்லாமாபாத் :டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து பாகிஸ்தான் அமைச்சர்களில் ஒருவர் கருத்து சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் புதிய திட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) “பாரத் பந்த்” என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், கேரளா, ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், சத்தீஷ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய 11 மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் முழுமையாக இருந்தது. பெரும்பாலான மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் பாகிஸ்தான் அமைச்சரவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சவுத்ரி ஃபவாத் உசேன், இந்திய விவசாயிகளிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சி செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 12 வது நாள் ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. ஆனால் டெல்லி கூட போராட்டம் குறித்து கேட்கவில்லை. குஜராத்தி இந்துத்துவத்தால் ஈர்க்கப்பட்ட பாஜக அரசுக்கு பஞ்சாபி விவசாயிகள் மீது அக்கறை இல்லை. இந்திய அரசாங்கத்தின் வெட்கக்கேடான பஞ்சாப் எதிர்ப்பு கொள்கைகள் இதயமற்றவை. எல்லையின் மறுபுறத்தில் உள்ள எனது பஞ்சாபி விவசாய சகோதரர்களுக்காக என் இதயம் துடிக்கிறது.” என்று ஹுசைன் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் பஞ்சாபி விவசாயிகளுக்காக பேசுமாறு பாகிஸ்தான் அமைச்சர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.“எங்கும் அநீதி என்பது எல்லா இடங்களிலும் நீதிக்கு அச்சுறுத்தல். பஞ்சாபி விவசாயிகளுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக நாம் பேச வேண்டும் மோடி கொள்கைகள் முழு பிராந்தியத்திற்கும் அச்சுறுத்தல்.” என்று ஹுசைன் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இதயமற்ற நரேந்திர மோடி அரசு பஞ்சாப் விவசாயிகளைப் பொருட்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.

Tags : Narendra Modi ,government ,BJP ,Minister ,Punjabi ,Pakistani , Minister of Pakistan, Comment
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...